FIFA உலகக்கோப்பை 2026 கால்பந்து திருவிழா ஆரம்பம்! எங்கே, எப்படிப் பார்ப்பது?

Estimated read time 1 min read

உலகமே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் FIFA உலகக்கோப்பை 2026 கால்பந்து தொடர், இன்று (ஜூன் 11) நள்ளிரவு கோலாகலமாகத் தொடங்குகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த உலகக்கோப்பைத் தொடரின் 23-வது பதிப்பை வட அமெரிக்காவில் உள்ள அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகளில் இணைந்து நடத்தப்படுகிறது.

இந்தத் தொடரில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் தலா 4 அணிகள் வீதம் 12 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தொடக்க சுற்றில் லீக் ஆட்டங்கள் ஜூன் 27-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இதன் முடிவில், தகுதி பெறும் 32 அணிகள் அடுத்தடுத்த சுற்றுக்கு முன்னேறும். மெக்சிகோ, கனடா மற்றும் அமெரிக்கா முழுவதும் மொத்தம் 16 நகரங்களில் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. தொடக்க விழா மெக்சிகோ சிட்டியிலும், இறுதிப்போட்டி அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள MetLife மைதானத்திலும் நடைபெற உள்ளது.

எங்கே பார்ப்பது?

இந்தத் தொடரை இந்தியாவில் ஒளிபரப்பு செய்யும் அதிகாரப்பூர்வ உரிமத்தை Zee Entertainment பெற்றுள்ளது. இதற்கென ‘Unite8 Sports’ என்ற புதிய ஸ்போர்ட்ஸ் சேனலையும் அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கட்டணச் சேவை: இலவசமாக முழு உலகக் கோப்பையையும் பார்க்க முடியாது என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகளின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமை Zee5-க்கு உள்ளது. FIFA போட்டிகளை நேரலையாகப் பார்க்க தனியாக ரூ.799 FIFA World Cup 2026 Pack வாங்க வேண்டும் என்று Zee5 தெரிவித்துள்ளது. சாதாரண Zee5 Premium சந்தாவிலும் இந்த போட்டிகள் சேர்க்கப்படவில்லை.

இலவசமாக பார்க்கலாமா?

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை இந்தியாவில் முழுமையாக இலவசமாக பார்க்க முடியாது. இருப்பினும், கட்டணச் சந்தா இல்லாத ரசிகர்களுக்காக DD Sports சேனலில் சில முக்கிய போட்டிகள் மட்டும் இலவசமாக நேரலையாக ஒளிபரப்பப்படுகின்றன.

அதன்படி, ஜூன் 12 அதிகாலை 12.30 மணிக்கு நடைபெறும் தொடக்கப் போட்டியான மெக்சிகோ – தென்னாப்பிரிக்கா ஆட்டம், காலிறுதிப் போட்டிகள், அரையிறுதிப் போட்டிகள் மற்றும் ஜூலை 19-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டி ஆகியவற்றை DD Sports-ல் இலவசமாகக் காணலாம். மற்ற லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றுப் போட்டிகளைப் பார்க்க ரசிகர்கள் ஒளிபரப்பு உரிமை பெற்ற தொலைக்காட்சி சேனல்கள் அல்லது OTT தளங்களின் கட்டணச் சந்தாவைப் பெற வேண்டும்.

தொடக்க விழா: இன்று இரவு 10:30 மணி முதல் தொடர்ந்து மூன்று தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

முதல் போட்டி: மெக்சிகோ சிட்டி ஸ்டேடியத்தில், மெக்சிகோ மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் தொடக்கப் போட்டி இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12:30 மணிக்கு (ஜூன் 12) தொடங்குகிறது.

நாளைய போட்டி: நாளை காலை 7:30 மணிக்கு, எஸ்டாடியோ குவாடலஜாரா மைதானத்தில் தென்கொரியா மற்றும் செக் குடியரசு அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறும்.

2026 பிபா உலகக் கோப்பையில் மொத்தம் 104 போட்டிகள் நடைபெறுகின்றன. இது உலகக் கோப்பை வரலாற்றிலேயே அதிகபட்ச போட்டிகளைக் கொண்ட தொடராகும். 48 அணிகள் பங்கேற்பதால் போட்டிகளின் எண்ணிக்கை 2022 உலகக் கோப்பையில் இருந்த 64 போட்டிகளிலிருந்து 104 ஆக உயர்ந்துள்ளது.

வட அமெரிக்காவில் போட்டிகள் நடப்பதால், இந்திய நேரப்படி பெரும்பாலான போட்டிகள் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களிலேயே ஒளிபரப்பாகும். எனவே, கால்பந்து ரசிகர்களுக்கு போட்டிகள் முடியும் வரை தூக்கமில்லாத கொண்டாட்டமான நாட்களாக இருக்கப்போவது உறுதி. முழு அட்டவணையை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்யுங்கள் ()

2026 பிபா உலகக் கோப்பை – அணிப் பிரிவுகள் (Groups)

You May Also Like

More From Author