தென் அமெரிக்க நாடான சிலியில் அமைந்துள்ள வேரா சி. ரூபின் விண்வெளி ஆய்வகத்தில் நிறுவப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் கேமரா, விண்வெளியின் பேரழகைப் படம் பிடித்துப் புதிய சரித்திரம் படைத்துள்ளது.
சுமார் 3,200 மெகாபிக்சல் திறன் கொண்ட இந்த எல்எஸ்எஸ்டி கேமரா, ஒரே புகைப்படத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான விண்மீன் திரள்களையும், 50,000 நட்சத்திரங்களையும் மிகவும் துல்லியமாகப் படம் பிடித்து வெளியிட்டுள்ளது.
ஒரு சிறிய காரின் அளவும், சுமார் 3,000 கிலோ எடையும் கொண்ட இந்த கேமரா விண்வெளி ஆராய்ச்சியாளர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
50,000 நட்சத்திரங்கள், 5 லட்சம் கேலக்ஸிகள்! உலகின் பிரம்மாண்ட டிஜிட்டல் கேமரா எடுத்த பிரமிப்பூட்டும் விண்வெளிப் படம்
