சீனாவின் பேரிடர் தடுப்பு அனுபவம் பயன் மிக்கது: கருத்துக் கணிப்பு

சீனாவில் இவ்வாண்டு, அடிக்கடி தீவிர வானிலை நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. பல்வேறு இடங்களில் பேரிடர் தடுப்புப் பணிகள் உயர் செயல்திறனுடன் மேற்கொள்ளப்பட்டன. இது பற்றி, சீன ஊடகக் குழுமத்தின் சிஜிடிஎன் நிறுவனம் உளகளாவிய இணையப் பயன்பாட்டாளர்களுக்கு மேற்கொண்ட கள ஆய்வில், சீனாவின் பேரிடர் தடுப்பு ஆற்றல் வலுவாக உள்ளது என 92.7 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர். சீனா இயற்கைச் சீற்றங்களை எதிர்நோக்கும் போது, சீரான முன் ஏற்பாட்டுப் பணிகள் செய்து, ஒழுங்கான முறையில் சமாளிக்க முடியும் என்று 87.4 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.

மேலும், உலகளவில், 40க்கும் மேலான நாடுகள் “மாசூ” எனும் சீன வானிலை நுண்ணறிவு முன்னெச்சரிக்கைத் திட்டத்தைப் பயன்படுத்துகின்றன. உலகில் தெற்கு நாடுகள் சீற்றத் தடுப்பு ஆற்றலை உயர்த்துவதற்கு சீனா துணை புரியும் வல்லரசின் பொறுப்பை இது எடுத்துக்காட்டுகிறது என்று 91.1 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.

You May Also Like

More From Author