நியூயார்கிலுள்ள ஐ.நாவின் தலைமையகத்தில் உள்ளூர் நேரப்படி செப்டம்பர் 26ஆம் நாள் நடைபெற்ற ஐ.நா பொது பேரவையின் 81வது கூட்டத்தொடரின் பொது விவாதத்தில் சீனத் துணை அரசுத் தலைவர் ஹான்ட்செங் பங்கெடுத்து உரை நிகழ்த்தினார்.
அப்போது ஹான்ட்செங் கூறுகையில், தற்போது, சர்வதேச நிலைமையில் மாற்றங்களும் குழப்பங்களும் உள்ளன. புவியமைவு மோதல்கள் தொடர்கின்றன. வளர்ச்சிக்கான இடைவெளி அதிகரிக்கப்பட்டு வருகிறது. உலகளாவிய அறைக்கூவல்கள் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், மென்மேலும் அதிகமான நாடுகள் கைகோர்த்துக்கொண்டு, வரலாற்றுப் பொறுப்பை ஏற்று, இன்னல்கள் மற்றும் சவால்களைச் சமாளித்து, மனித குலத்தின் பொது நலன்களை அதிகரித்து வருகின்றன என்றார்.
மேலும், அவர் 4 முன்மொழிவுகளை வழங்கினார். முதலாவதாக, 2வது போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கைப் பேணிக்காத்து, பொது பாதுகாப்பின் மூலம் நீண்டகால அமைதியை உருவாக்க வேண்டும். இரண்டாவதாக, உலக வளர்ச்சி சிக்கல்களை எதிர்க்கொண்டு, திறப்பு மற்றும் ஒத்துழைப்புகளின் மூலம் பொது செழுமையை முன்னேற்ற வேண்டும். மூன்றாவதாக, நாகரிகப் பரிமாற்றம் மற்றும் பகிர்வை முன்னேற்றி, தொடர்பு மற்றும் பேச்சுவார்த்தைகளின் மூலம் ஒற்றுமை மற்றும் பரஸ்பர நம்பிக்கையை மீண்டும் உருவாக்க வேண்டும். நான்காவதாக, பலதரப்புவாதத்துக்கு முக்கியத்துவம் அளித்து, நடைமுறைச் செயல்களின் மூலம் நேர்மை மற்றும் நீதியைப் பேணிக்காக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
