சாம்பியா அரசுத் தலைவருக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து

சாம்பியா அரசுத் தலைவராகத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஹகைண்டே ஹிச்சிலேமாவுக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஆகஸ்ட் 20ஆம் நாள் வாழ்த்து தெரிவித்தார்.

ஷி ச்சின்பிங் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக, நாம் 2 முறையாக சந்திப்பு நடத்தி, சீன-சாம்பியா உறவின் வளர்ச்சிக்குக் கூட்டாக வழிக்காட்டுகிறோம். இரு நாடுகளின் ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கை தொடர்ச்சியாக ஆழமாகி, பயனுள்ள ஒத்துழைப்புகள் செழிப்பான சாதனைகளைப் பெற்றன என்றார். மேலும், சீன-சாம்பியா உறவின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறேன். அரசுத் தலைவர் ஹிச்சிலேமாவுடன் இணைந்து, ஒன்றுக்கொன்று நலன் தரும் ஒத்துழைப்புகளின் தரத்தை உயர்த்தி, சீன-சாம்பியா பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவு புதிய கட்டத்தில் காலடியெடுத்துவைத்து, இரு நாட்டு மக்களுக்கு மேலும் சிறந்தாக நன்மை புரிய விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author