சிட்சாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் அவசர நிலை மேலாண்மை வாரியம் 27ஆம் நாள் வெளியிட்ட தகவல்களின்படி, 20 டன் பார்லி, 50 டன் அரிசி, 1122 கூடாரங்கள், 14 மின்னாக்கிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் சிக்காச்செ நகரின் கிர்ரொங் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
அதே வேளையில், சீன மத்திய அரசு வழங்கியுள்ள 30 ஆயிரம் நிவாரணப் பொருட்களையும் சீன அவசர நிலை மேலாண்மை அமைச்சகம் இம்மாவட்டத்திற்கு வினியோகித்துள்ளது.
இதனிடையில் புதிதாக நிகழும் பேரழிவு மற்றும் இனிமேல் நிகழக் கூடிய பேரழிவின் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில், தற்போது வரை, இயற்கை மூலவளத் துறையினர்கள் உள்ளிட்ட 84 சிறப்புப் பணியாளர்கள், சிறப்புச் சாதனங்களோடு பேரழிவு நிகழ்ந்த பகுதிகளுக்குச் சென்று ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
மண் சரிவால் பாதிக்கப்பட்ட 499 மக்கள் சீராக குடியமர்த்தப்பட்டுள்ளனர். அது போல பாதிக்கப்பட்ட பகுதிகளில் தங்கி இருக்கும் 555 பயணிகளும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
