ஒருதலைபட்ச கட்டாய நடவடிக்கை ஐ.நா சாசனத்தின் குறிக்கோள் மற்றும் கோட்பாடுகளை மீறியுள்ளது. இது பலதரப்புவாதம் மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையைப் பாதிக்கும் என்று ஐ.நாவுக்கான சீன நிரந்தர பிரதிநிதி ஃபுஸுவுங் 17ஆம் நாள் ஐ.நா பொது பேரவையின் விவாதத்தில் உரைநிகழ்த்திய போது சுட்டிக்காட்டினார்.
நிதி முற்றுகை, வர்த்தகத் தடை, ஆட்சி எல்லையை இதர நாடுகளுக்கு நீட்டித்தல் உள்ளிட்ட ஒருதலைபட்ச கட்டாய நடவடிக்கை சர்வதேச பொருளாதார மற்றும் அறிவியல் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளைக் கடுமையாகச் சீர்குலைக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஐ.நா பொதுப் பேரவை இவ்விவாதத்துக்குப் பின்பு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி ஒவ்வொரு ஆண்டின் டிசம்பர் 4ஆம் நாள் ஒருதலைபட்ச கட்டாய நடவடிக்கை எதிர்ப்புக்கான சர்வதேச தினமாக நிறுவுவதாக அறிவித்துள்ளது.