உலக நிர்வாக முன்மொழிவை தெற்குலக நாடுகள் ஏற்க காரணம்

Estimated read time 0 min read

‘உலக நிர்வாக முன்மொழிவைத் தெற்குலக நாடுகள் ஆக்கப்பூர்வமாக ஏற்க காரணம் என்ன?’ என்ற கட்டுரையை நைஜீரியாவின் டி சன் எனும் செய்தித்தாள் அண்மையில் வெளியிட்டது. அதில் சுட்டிக்காட்டுகையில், சீனா முன்வைத்த உலக நிர்வாக முன்மொழிவு தெற்குலக நாடுகளின் கூட்டு வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போதைய சர்வதேச அமைப்பு முறையைக் கலைக்க இந்த முன்மொழிவு விரும்பவில்லை என்பது அதற்கான காரணங்களில் ஒன்று. அதற்கு மாறாக, பல வளரும் நாடுகளின் கருத்தில் 21ஆம் நூற்றாண்டின் உண்மையான நிலைமைகளைப் பிரதிபலிக்க முடியாத நிறுவனங்களைச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என அது வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், பிரிக்ஸ் நாடுகள், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, 77நாடுகள் குழு முதலிய பரந்து பட்ட மேடைகளுக்கும் உலக நிர்வாக முன்மொழிவுக்கும் இடையே உள்ள தொடர்பானது, இம்முன்மொழிவு வரவேற்பு பெற்ற இன்னொரு ஈர்ப்பாற்றல் ஆகும். இந்த மேடைகளில் வளரும் நாடுகள், முன்னுரிமை பணிகள் மற்றும் நிகழ்ச்சி நிரல்களின் வகுப்பில் மேலும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை ஆற்ற முடியும்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author