உள்ளூர் நேரப்படி செப்டம்பர் முதல் நாள், பிஷ்கெக் நகரில், கிர்கிஸ்தான் அரசுத் தலைவரின் மனைவி ஐகுல் ஜபரோவாவ் அம்மையார் நடத்திய 2026ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களின் மனைவிகள் கூட்டு நிகழ்வில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் மனைவி பெங் லீயுவான் அம்மையார் கலந்து கொண்டார்.
தொடர்புடைய நாட்டுத் தலைவர்களின் மனைவிகளுடன், கிர்கிஸ்தான் தேசிய இனப் பண்பாடுகளின் கண்காட்சியை பெங் லீயுவான் பார்வையிட்டு, குழு புகைப்படத்தை எடுத்த பிறகு, கலை நிகழ்ச்சியைக் கண்டு ரசித்தார். அப்போது அவர் கூறுகையில், இக்கலை நிகழ்ச்சி மிகவும் சிறந்தது. சீன பார்வையாளர்கள் கிர்கிஸ்தானின் வண்ணமயமான பண்பாடுகளை உணர்ந்து கொள்ளும் வகையில், கிர்கிஸ்தானின் கலைஞர்கள் சீனாவில் நிகழ்ச்சிகளை வழங்கி, பரிமாற்றத்தை மேற்கொள்வதை வரவேற்கிறோம் என்றார்.
