நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷனின் போது அவர் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் என்பதை உறுதிப்படுத்திய சூரி, தனது சிறுவயது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
“தீபாவளிக்கு எடுத்த புது சட்டையை போட்டுக்கொண்டு தலைவரின் ‘தளபதி’ படம் பார்க்கச் சென்றேன். கூட்டத்தில் சட்டை கிழிந்துவிட்டதால் வீட்டுக்கு போக பயந்து ஊருக்குள்ளேயே சுற்றினேன். ரஜினி சாரைப் பார்த்துதான் எனது இயற்பெயரான ‘ராமன்’ என்பதை ‘சூர்யா’ என மாற்றினேன். பின்னர் சினிமாவுக்கு வந்த போது ‘சூரி’யாக மாறினேன்” எனக்கூறியுள்ளார்.
மேலும், அண்ணாத்தே படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை அளித்த இயக்குநர் சிவாவுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
மண்டாடி படத்திற்காக இன்சூரன்ஸ் போட்ட சூரி: ரஜினி ரசிகனாக இருந்து அண்ணாத்தே வரை நெகிழ்ச்சிப் பேட்டி
