எகிப்து அருங்காட்சியகத்தில் ஷிச்சின்பிங் தம்பதி பயணம்

Estimated read time 1 min read

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மற்றும் அவரது மனைவி பெங் லீயுவான் அம்மையார் செப்டம்பர் 2ம் நாள் மாலை, எகிப்து அரசுத் தலைவர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி மற்றும் அவரின் மனைவி எந்திசார் அம்மையாரின் உடனிருப்பில் கிரான்ட் எகிப்து அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டனர்.

அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், சீனாவும் எகிப்தும்  பழம் பெறும் நாகரிகச் சிறப்புகள் மற்றும் மரபுச் செல்வங்களைக் கொண்ட நாடுகளாகும். இரு நாடுகளின் மக்கள் தலைமுறை தலைமுறையாக நட்பு அத்தியாயத்தை உருவாக்கி வருகின்றனர். இரு தரப்பும், சமத்துவம், பரிமாற்றம், பேச்சுவார்த்தை, உள்ளடக்கிய தன்மை ஆகியவை கொண்ட நாகரிகச் சிந்தனையுடன், பல்வேறு நாகரிகங்களின் சகவாழ்வைக் கூட்டாக முன்னேற்றி, மனித குலத்திற்கான பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானத்தை முன்னெடுப்பதற்கு மேலதிக நாகரிகச் சக்திகளைத் திரட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.

2ம் நாளிரவு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் எகிப்து அரசு பயணம் நிறைவடைந்தது. எகிப்து அரசுத் தலைவர் தம்பதி கெய்ரோவின் விமான நிலையத்திற்கு வருகை தந்து ஷிச்சின்பிங்கை வழியனுப்பினர்.

 

You May Also Like

More From Author