சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் செப்டம்பர் 1、2ஆகிய நாட்களில் எகிப்தில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டது குறித்து எகிப்தின் பல்வேறு துறைகளிலிருந்து பெரும் பாராட்டை பெற்றுள்ளது. இப்பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசுமுறைப் பயணமாகும் என்றும், எகிப்து-சீனாவின் பாரம்பரிய நட்புறவுக்கு புதிய காலத்தின் முக்கியத்துவம் அளித்துள்ளது என்றும், இரு நாடுகளும் மேலும் விரிவான ஒத்துழைப்பு பாதையில் கையோடு கைகோர்த்து முன்னேறி வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டன.
தற்போது சீனாவும் எகிப்தும் வளர்ச்சி மற்றும் மறுமலர்ச்சி அடையும் முக்கிய காலக்கட்டத்தில் உள்ளன.
இந்தப் பயணம், சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் எகிப்தில் மேற்கொண்ட அரசுமுறைப் பயணமாகும். சீனாவுக்கும் எகிப்துக்கும் இடையேயான தூதாண்மை உறவு நிறுவப்பட்டதன் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணம். எதிர்காலத்தைத் திறந்து வைக்கக் கூடிய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என்று கருதப்படுகிறது.
பரஸ்பர ஆதரவை உறுதிப்படுத்துதல், பரஸ்பர ஒத்துழைப்பை ஊக்குவித்தல் உள்ளிட்ட சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த 5 முன்மொழிவுகள், சீன-எகிப்து உறவின் எதிர்கால வளர்ச்சிக்கான ஒரு புதிய திசையைச் சுட்டிக்காட்டியுள்ளன. எகிப்தின் அல்-அஹ்ராம் ஏட்டின் இணையத்தளத்தில் செப்டம்பர் 2ஆம் நாள் வெளியிட்ட கட்டுரையில், வளர்ந்து வரும் நாடான எகிப்து, தனது நாட்டின் பொருளாதார செழுமையை நனவாக்குவதற்காக, பல்வேறு தரப்புகளுடனான ஒத்துழைப்புகளை ஆக்கமுடன் நாட வேண்டும் என்றும், அதற்காக, சீனாவுடனான உறவை வளர்ப்பது மிகவும் முக்கியமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
