ரஷிய அரசுத் தலைவருடன் டிங் சுயேசியாங் சந்திப்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், துணைத் தலைமை அமைச்சருமான டிங் சுயேசியாங், செப்டம்பர் 2ஆம் நாளிரவு ரஷியாவின் விலாடிவோஸ்டாக்கில் அந்நாட்டின் அரசுத் தலைவர் புதினுடன் சந்திப்பு நடத்தினார்.

டிங் சுயேசியாங் கூறுகையில், இருநாட்டு அரசுத் தலைவர்களின் உத்திப்பூர்வ வழிகாட்டலின் கீழ், புதிய யுகத்திற்கான சீன-ரஷிய பன்முக உத்திநோக்குடன் கூடிய ஒருங்கிணைந்த கூட்டாளியுறவு தொடர்ந்து ஆழமடைந்துள்ளது என்றார். ஆசிய-பசிபிக் பிரதேசத்திலுள்ள அனைத்து நாடுகளும் ஒத்துழைப்புக்கான ஒருமித்த கருத்தை உருவாக்கும் முக்கியத் தளமான கீழைப் பொருளாதார மன்றம், இவ்வாண்டில் ‘தொலைதூரக் கிழக்கு: மக்களுக்கான வளர்ச்சி’ என்பதைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது எனக் குறிப்பிட்ட அவர், பரஸ்பர நன்மை மற்றும் கூட்டு வெற்றியின் சாதனைகள் மூலம் இருநாட்டு மக்களுக்குச் சிறப்பாக பயனளிக்கும் வகையில், சீனா-ரஷியா இடையே வடகிழக்கு-தொலைதூரக் கிழக்கு ஒத்துழைப்பு வழிமுறையையும் தொடர்புடைய கொள்கை ஆதரவையும் இருநாடுகளும் தொடர்ந்து நன்கு பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author