உலகளாவிய மகளிர் உச்சி மாநாடு பெய்ஜிங்கில் நடைபெற்றுவருகின்றது. இதை முன்னிட்டு, சீன ஊடக குழுமத்தின் சி.ஜி.டி.என். உலகில்
38நாடுகளைச் சேர்ந்த 7292 பேரிடம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. சமூக மற்றும்
பொருளாதார மேம்பாட்டுக்காக மகளிர் முக்கிய சக்தியாக திகழ்கின்றனர் என்பது இதில்
பங்கேற்றவர்களின் ஒத்த கருத்தாக மாறியுள்ளது. சீனாவின் மகளிர் இலட்சியத்தின்
வளர்ச்சி தத்துவம் மற்றும் சாதனைகளுக்கும் அவர்கள் ஆக்கப்பூர்வமாக பாராட்டு
தெரிவித்தனர்.
இந்தக் கருத்து கணிப்பில் 74.9விழுக்காட்டினர்
மகளிர் தொடர்பான கருப்பொருளில் கவனம் செலுத்தி வருகின்றனர். அவர்களில் வளர்ந்து
வரும் நாடுகளைச் சேர்ந்த பதிலளித்தவர்களின் விகிதம், 80.9 சதவீதத்தை எட்டியது.
மகளிர் உரிமை மற்றும் நலன்களைப் பாதுகாப்பது குறித்த மதிப்பீட்டில், மகளிர் கல்வி
வாய்ப்பு பெறுதல் மற்றும் அரசியல் பங்கெடுப்பு, மகளிர் உடல் நலம் ஆகியவை திருப்தி
அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த மூன்று துறைகளின் திருப்தி விகிதங்கள்
முறையே 92, 87 மற்றும் 86விழுக்காடு வகிக்கின்றது. 35முதல் 44வயது வரையிலானவர்களின்
கருத்துக்களில், அங்கீகார விகிதம், பொதுவாக சராசரியை விட அதிகமாக உள்ளது.
தவிர, மகளிர் இலட்சியத்தின் மேம்பாட்டுக்கான
எதிர்பார்ப்பு விகிதங்களில், கல்வி, உடல் நலம், மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவை
முதல் மூன்று இடங்களைப் பிடித்தன. இந்த மூன்று துறைகளின் எதிர்பார்ப்பு விகிதங்கள்
முறையே 91.5, 90.6 மற்றும் 89.5விழுக்காடு வகிக்கின்றது.