திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நவராத்திரி விழா கோலாகலம்!

Estimated read time 0 min read

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நவராத்திரி திருவிழாவின் 9ஆம் நாள் உற்சவத்தில் கோவர்த்தனாம்பிகை அம்மன் சிவபூஜை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 11ஆம் தேதி நவராத்திரி திருவிழா கோலாகலமாக தொடங்கியது. நாள்தோறும் கோவத்தினாம்பிக்கை அம்மன் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

அந்த வகையில், நவராத்திரி திருவிழாவின் 9ஆம் நாள் உற்சவத்தில் உச்சிகால பூஜையின்போது, சுவாமியின் கேடயம், வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுக்குச் சிறப்புப் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, கோயில் நாதஸ்வர மற்றும் தவில் இசைக் கருவிகளுக்கும் பூஜைகள் செய்யப்பட்டன.

இதனை தொடர்ந்து, கோவர்த்தனாம்பிகை அம்மன் சிவபூஜை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author