சீனாவின் மின்சார வானகங்கள் மீதான சலுகைக்கு எதிரான வரி வசூலிப்புப் விசாரணை– ஐரோப்பிய ஒன்றியம்
சீனாவின் மின்சார வானகங்கள் மீதான சலுகைக்கு எதிரான வரி வசூலிப்பு புலனாய்வு பற்றிய தகவலை ஐரோப்பிய ஒன்றியம் 20ஆம் நாள் வெளியிட்டது. இத்தகவலின்படி முன்னதாக சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சீன மற்றும் ஐரோப்பிய ஒன்றிய மின்சார வாகனங்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளுக்கு எதிராக 5 ஆண்டுகளுக்கு முறையே 17 மற்றும் 36.3 விழுக்காட்டு வரி வசூலிக்கப்படும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இப்பிரச்சினையில் ஐரோப்பிய ஒன்றியம் சலுகைகளுடன் கூடிய சமரசத்திற்கு வந்துள்ளது, இருப்பினும், உலக வர்த்தக அமைப்பின் விதி மற்றும் ஒழுங்குகளை தவறாகப் பயன்படுத்துதல், விசாரணைக் கருவிகளை ஆயுதமயமாக்குதல் மற்றும் நியாயமான போட்டி என்னும் பெயரில் நியாயமற்றுச் செயல்படும் தன்மையை மாற்றிக் கொள்ளவில்லை.
ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட இத்தகவல்களில், சீனத் தரப்பின் கருத்துகளும் ஆலோசனைகளும் சேர்க்கப்படவில்லை என்பதோடு, தொடர்ந்து தவறான பாதையில் நடைபோட்டும் வருகின்றது, ஐரோப்பிய ஒன்றியத்தின் செயல்பாடு இரு தரப்பும் பொதுவாக ஒப்புக்கொண்ட உண்மை அல்ல என்பதோடு, ஐரோப்பிய ஒன்றியத்தில் சிலரால் கூறப்படும் விதி, சட்டமைப்பு, நேர்மை ஆகியவற்றுக்கும் புறம்பானதாக அமைந்துள்ளது.
சீனாவின் மின்சார வாகனங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் கூடுதல் வரிகளை விதித்தால், அது சீன முதலீடுகளை இழக்க நேரிடும். எனவே, ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்கவரி அதிகரிப்புச் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.