கார் சேஸிங் காட்சியில் நடிகை த்ரிஷா நடித்துள்ள வீடியோ அவரது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சில காலமாக சினிமாவில் பெரிய வெற்றிப்படங்களை கொடுக்காமல் இருந்த த்ரிஷா பொன்னியின் செல்வன், லியோ போன்ற படங்களில் வெற்றிக்கு பிறகு அஜித் நடிக்கும் விடாமுயற்சி, தக்லைப், உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது அவர் ‘Identity’ என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
Mighty kicked about this one#Identity pic.twitter.com/c3RMM4OJBV
— Trish (@trishtrashers) December 23, 2023
டோவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்த திரைப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் அவர் சில நாட்களாக கலந்து கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில் த்ரிஷா, கார் சேஸிங் காட்சியில் நடிப்பது போன்றும் அந்த காட்சியை ட்ரோன் கேமரா மூலம் படமாக்குவது போன்ற காட்சிகள் உள்ளன.
டோவினோ தாமஸ், த்ரிஷா, வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.