சன் யட் சான் அவர்களின் 160ஆவது பிறந்த நாள் நினைவை முன்னிட்டு, சீனத் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சிப் பணியகத்தின் வழிக்காட்டலில் சன் யட் சான் எனும் ஆவணப்படம் நவம்பர் 8ஆம் நாள் ஒளிபரப்பப்படத் தொடங்கியுள்ளது என்று சீன அரசவைத் தைவான் விவகாரப் பணியகம் 11ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது. சீன ஊடகக் குழுமம் மற்றும் குவாங்டொங் மாநிலக் கட்சி குழுவின் பரப்புரை அமைச்சகத்துடன் இணைந்து தயாரித்த இந்த ஆவணப்படத்தில் வரலாற்று பதிவுகளின் அடிப்படையில் தொழில்நுட்பங்களின் உதவியுடன் சன் யட் சான் அவர்களின் புரட்சிக் கதையும் அவர்களின் நாட்டுப்பற்று மற்றும் புரட்சி எழுச்சியும் விளக்கிக் கூறப்பட்டுள்ளன. சீனத் தேசத்தின் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும், நாட்டின் ஒன்றிணைப்பை முன்னேற்றுவதற்கும் இது முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
