சீன-பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி உரையாடல்

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ 10ஆம் நாள், தொலைபேசி மூலம், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் பாரொதுடன் தொடர்புக்கொண்டார்.

அப்போது வாங்யீ கூறுகையில், பிரான்ஸுடன் இணைந்து, சர்வதேச சமூகத்தின் பொது நலன்களைப் பேணிக்காக்க சீனா விரும்புகிறது. இரு நாட்டுத் தலைவர்களின் ஒத்த கருத்துக்களை நடைமுறைப்படுத்தி, பல்வேறு அபாயங்களையும் அறைகூவல்களையும் இரு தரப்பும் கூட்டாகச் சமாளிக்க வேண்டும். ஒரே சீனா எனும் கோட்பாட்டைப் பின்பற்றும் வாக்குறுதியை பிரான்ஸ் செயல்பூர்வமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

பாரொத் கூறுகையில், ஒரே சீனா எனும் கொள்கையை பிரான்ஸ் எப்போதும் பின்பற்றி வருகிறது. சீனத் தரப்புடன் இணைந்து, நெடுநோக்கு ரீதியில் பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்த விரும்புகின்றோம். ஐரோப்பிய-சீன பேச்சுவார்த்தையையும் ஒத்துழைப்புகளையும் விரைவுபடுத்துவதற்கு ஆக்கப்பூர்வமாகப் பங்காற்ற பிரான்ஸ் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author