சமாதானம்! கவிஞர் இரா .இரவி –
அமைதிக்குக் காரணம் சமாதானம்
அறிவுக்கு இலக்கணம் சமாதானம்
அழிவை தவிர்க்கும் அற்புத வழி சமாதானம்
அன்பை வளர்க்கும் நல் மொழி சமாதானம்
வன்முறை தவிர்க்கும் ஆயுதம் சமாதானம்
நன்மறை வளர்க்கும் வழி சமாதானம்
பகுத்தறிவைப் பயன்படுத்திட சமாதானம்
பண்பு வளர்க்கும் நுட்பம் சமாதானம்
விட்டுக் கொடுக்க வைப்பது சமாதானம்
கெட்டுப் போகவிடுவதில்லை சமாதானம்
நடந்த கொடியவைகளை மறக்கடிக்கும் சமாதானம்
நடப்பதை நல்லதாக்கும் உடன்பாடு சமாதானம்
உடன்பாட்டுச் சிந்தனையின் வெளிப்பாடு சமாதானம்
உடன் பட்டு ஒற்றுமையை உருவாக்கும் சமாதானம்
மோதி வீழ்வது விலங்கின் குணம்
மோதாமல் இணைவது மனித மனம்
சாத்தியமே எங்கும் சமாதானம்
சத்தியமே உணர்த்தும் சமாதானம்
விதி விலக்குகள் சில உண்டு
வீணர்கள் சிலர் உண்டு
சில மனிதவிலங்குகளிடம் மட்டும்
சமாதானம் சாத்தியம் இல்லை.