ஹாங்சோ 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான வெளிநாட்டவர்களின் பாராட்டுக்கள்
ஹாங்சோ 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் கலந்துகொண்டுள்ள பல்வேறு நாடுகளின் அதிகாரிகள், வீரர்கள், செய்தியாளர்கள், சி.எம்.ஜி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த போது, விளையாட்டுப் போட்டியின் ஏற்பாட்டுப் பணிகளை வெகுவாக மதிப்பிட்டனர்.
ஈர்ப்பு மிக்க விளையாட்டுப் போட்டியை சீனா நடத்தியுள்ளது. முழு ஆசியாவின் வளர்ச்சி மற்றும் ஒற்றுமைக்கு இவ்விளையாட்டுப் போட்டி ஆக்கப்பூர்வமான ஆற்றலைக் கொண்டு வந்துள்ளது என்று இலங்கை பிரதிநிதிகள் குழுவின் தலைவர் நிஷாந்தா பியசேனா தெரிவித்தார்.
இவ்விளையாட்டுப் போட்டி, சர்வதேச விளையாட்டுப் போட்டிக்கான புதிய முன்மாதிரியாக மாறியுள்ளது. எண்ணியல் தொழில் நுட்பம் மற்றும் மனித அக்கறையுடன் சீராக ஒன்றிணைந்துள்ளது என்று மலேசிய தேசிய செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் ஃபேபியன் மார்க் தெரிவித்தார்