2ஆவது சீனா-மத்திய ஆசியா உச்சிமாநாடு ஜுன் 17ஆம் நாள் அஸ்தானாவில் நடைபெற்றது. இதில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உரை நிகழ்த்துகையில், உயர்தர ஒத்துழைப்புக்கு சீனா-மத்திய ஆசியா எழுச்சியை முன்னெடுத்து செல்லுமாறு அழைப்பு விடுத்தார்.
கசகஸ்தான் அரசுத் தலைவரின் தலைமையில் நடைபெற்ற இவ்வுச்சி மாநாட்டில், கிர்கிஸ்தான், தாஜ்கிஸ்தான், துர்கமேனிஸ்தான், உஸ்பேகிஸ்தான் ஆகிய நாடுகளின் அரசுத் தலைவர்களும் பங்கேற்றனர். சிஆன் உச்சிமாநாட்டுக்குப் பிறகு பல்வேறு துறைகளில் சீனா மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் ஒத்துழைப்பு சாதனைகளை ஷிச்சின்பிங் அவர்களுடன் இணைந்து மீளாய்வு செய்து எதிர்கால வளர்ச்சி திசையை முன்னோக்கி பார்த்தார். இதனைத் தொடர்ந்து ஷிச்சின்பிங் உரை நிகழ்த்தியபோது, சீனா-மத்திய ஆசியா இயங்குமுறை அடிப்படையில் உருவெடுத்துள்ளது. சீனாவுக்கும் மத்திய ஆசிய நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு 2000 ஆண்டுகளுக்கும் மேலான நட்பு பரிமாற்றத்தில் வேரூன்றி, புதிய யுகத்தின் திறப்பு மற்றும் கூட்டு வெற்றி ஒத்துழைப்பை முன்னேற்றியுள்ளது என்று கூறினார். உயர்தர வளர்ச்சி மூலம் நவீனமயமாக்கத்தை கூட்டாக நாடுவதற்கான பரஸ்பர மதிப்பு, நம்பிக்கை, நலன் மற்றும் உதவியைக் கொண்ட சீனா-மத்திய ஆசியா எழுச்சியை 6 நாடுகள் உருவாக்கியுள்ளன. தலைமுறை நட்பு ஒத்துழைப்புக்கு வழிக்காட்டலாக திகழும் இந்த எழுச்சியைப் பின்பற்றி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச நிலைமை முன்கண்டிராத வேகத்தில் மாறி வரும் நிலையில், உலக அமைதியைப் பேணிக்காத்து கூட்டு வளர்ச்சியை நனவாக்குவதற்கு சமத்துவம் மற்றும் நீதியையும், பரஸ்பர நலன் மற்றும் கூட்டு வெற்றி ஒத்துழைப்பையும் பின்பற்றுவது ஒரே ஒரு வழியாகும் என்று குறிப்பிட்ட ஷிச்சின்பிங், 6 நாடுகள் சீனா-மத்திய ஆசியா எழுச்சியின் அடிப்படையில் நடைமுறைக்கு ஏற்ற நடவடிக்கைகளின் மூலம் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.