6ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிக் கண்காட்சி நவம்பர் 5 முதல் 10ஆம் நாள் வரை ஷாங்காய் மாநகரில் நடைபெறவுள்ளது. இறக்குமதியை கருப்பொருளாகக் கொண்டுள்ள உலகின் முதலாவது தேசிய நிலை கண்காட்சி இதுவாகும்.
தற்போது வரை இக்கண்காட்சி, உயர்நிலை திறப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான அரங்காகவும், பகிரக் கூடிய சர்வதேச பொது தயாரிப்பாகவும் மாறியுள்ளது. உலகிற்கு பெரும் வாய்ப்புகளை கொண்டு வரும் சீனச் சந்தை என்பற்கு இந்த இறக்குமதிக் கண்காட்சி சிறந்த உதாரணமாகும்.
கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இக்கண்காட்சிக்குச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அனுப்பிய வாழ்த்துச் செய்திகளில், திறப்பு, வாய்ப்பு, பகிர்வு போன்ற திறவுச்சொற்கள் இடம்பெற்றன. சீனாவின் திறந்த கதவு மூடப்படாது. மாறாக, திறந்த நிலை மேலும் விரிவாக்கப்படும் என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.
140 கோடி மக்கள் தொகை கொண்ட சீனாவில் நடுத்தர வருமானமுடையவர்களின் எண்ணிக்கை 40 கோடியைத் தாண்டியுள்ளது. இந்நிலையில் சீனா, உலகளவில் மிக அதிக உள்ளார்ந்த வாய்ப்பு கொண்ட சந்தையாக திகழ்கிறது.
எதிர்வரும் 10 ஆண்டுகளில் சீனாவின் இறக்குமதி தொகை மொத்தமாக 22லட்சம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சீனாவின் திறப்புக்கொள்கை, பல்வேறு நாடுகள் சீனாவின் வளர்ச்சி வாய்ப்பைக் பகிர்ந்து கொள்வதற்கு துணைபுரியும்.