10ஆவது உலக நாகரிகம் பற்றிய நிஷான் மன்றம் ஜூலை 10ஆம் நாள், சீனாவின் ஷான்தோங் மாநிலத்தின் ட்சூஃபூ நகரில் தொடங்கியது.
பாரம்பரியப் பண்பாடு மற்றும் நவீன நாகரீகம் என்பது இம்மன்றத்தின் தலைப்பாகும். உலக நாகரிக முன்மொழிவை நடைமுறைப்படுத்துவது, மனிதக் குலத்தின் பொது மதிப்பைப் பரவல் செய்தல் மற்றும் மனிதகுலப் பொதுச் சமூகத்தை உருவாக்குவது என்பது இம்மன்றத்தின் நோக்கமாகும்.
இம்மன்றம் உலகின் பல்வேறு நாடுகள், இனங்கள், பண்பாடுகள் ஆகியவற்றுக்குமிடையிலான பரிமாற்றத்தை விரைவுபடுத்தி வருவதோடு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் பொது அக்கறை கொண்ட முக்கிய பிரச்சினைகளில் முக்கியமாகக் கவனம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.