6ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியில், ஓராண்டு சரக்கு மற்றும் சேவைகளின் கொள்வனவுக்காக 7841 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆரம்பக்கட்ட ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட இது 6.7 விழுக்காடு அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
நடப்புப் பொருட்காட்சியில் பங்கெடுத்த அமெரிக்காவின் உணவு மற்றும் விவசாயத் தொழில் நிறுவனங்கள், சீனாவின் ஜியாங்சூ, ஃபூஜியான், ஷென்ட்சென் உள்ளிட்ட இடங்களின் கொள்வனவு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு குறிப்பாணைகளில் கையொப்பமிட்டுள்ளன. அதன் தொகை 50.5 கோடி அமெரிக்க டாலரை எட்டியது.
மேலும், நடப்புப் பொருட்காட்சியில் ஆப்பிரிக்க விவசாயப் பொருட்களுக்கு முதன்முறையாக அமைக்கப்பட்ட சிறப்பு அரங்கில், 9 ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 20 தொழில் நிறுவனங்கள் பொருட்களைக் காட்சிக்கு வைத்துள்ளன. இத்தொழில் நிறுவனங்களுடன் கையெழுத்தான விருப்ப ஒப்பந்தத் தொகை 14.8 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.