சிலுவைக்காக வெட்டப் பட்டிருந்தாலும் சரி…
செப்புகள் செதுக்கி
விற்கப்பட்டிருந்தாலும் சரி..
நிலைகள் என நிறுத்தி
வைத்திருந்தாலும் சரி …
மரச்சாமான்களாய்
மடிந்து கிடந்தாலும் சரி…
கவலை ஒன்றுமில்லை!!!
உயிர்த்தெழுதல்
என்பதே…என் பண்பானதால்
நானும் கர்த்தரே…!!!
திருமலை சோமு