சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அண்மையில் சான்ஷி மாநிலத்தின் யுன்ச்செங் அருங்காட்சியகத்தில் பயணம் மேற்கொண்டு, மனித குலத்தின் தோற்றம் மற்றும் சீனத் தேச நாகரிகத்தின் வரலாறு பற்றி அறிந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், அருங்காட்சியகத்தில் மதிப்புள்ள தொல் பொருட்கள் அதிகமாக உள்ளன. சீனாவில் பத்து லட்சம் ஆண்டுகளுடைய மனித குல வரலாறு, பத்து ஆயிரம் ஆண்டுகளுடைய பண்பாட்டு வரலாறு, 5000க்கும் மேலான ஆண்டுகளுடைய நாகரிக வரலாறு ஆகியவற்றுக்கு இத்தொல் பொருட்கள் சாட்சியாக உள்ளன. சீனத் தேச நாகரிக தோற்றத்துக்கான ஆய்வுத் திட்டப்பணியைச் செயல்படுத்தி, சீன நாகரிக வரலாற்றை ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மனித குலம் மற்றும் சீனத் தேச நாகரிகத்தின் முக்கிய தோற்ற இடங்களில் ஒன்றாக யுன்ச்செங் நகரம் திகழ்கிறது. யுன்ச்செங் அருங்காட்சியகத்தில் 30 ஆயிரத்துக்கும் மேலான தொல் பொருட்கள் உள்ளன.