தற்போதைய ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே செவ்வாயன்று தனது பதவிக்காலத்தை நீடிக்க விரும்பவில்லை என தெரிவித்ததை அடுத்து, ICC தலைவர் போட்டியிலிருந்து அவர் அதிகாரபூர்வமாக விலகினார்.
பார்க்லேயின் பதவிக்காலம் நவம்பர் 30 அன்று முடிவடைந்ததைத் தொடர்ந்து, ICC தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனுக்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாக ஆகஸ்ட் 27 என குறிப்பிடப்பட்டுள்ளது.
“ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இருந்தால், புதிய தலைவரின் பதவிக்காலம் 1 டிசம்பர் 2024 அன்று தொடங்கும் வகையில் தேர்தல் நடத்தப்படும்.” என ICC போர்டு தெரிவித்துள்ளது.
எனினும் இந்த பதவிக்கு பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.