ஜனவரி 29-ல் ‘பரிக்ஷா பே சர்ச்சா 2024’ நிகழ்ச்சியின் 7-வது பதிப்பு!

பிரதமர் நரேந்திர மோடியின் ‘பரிக்ஷா பே சர்ச்சா 2024’ நிகழ்ச்சியின் 7-வது பதிப்பு ஜனவரி 29-ம் தேதி நடைபெறவிருப்பதாகவும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்க இதுவரை 1 கோடி பேர் பதிவு செய்திருப்பதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து கல்வி அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “பரிக்ஷா பே சர்ச்சா 2024” (தேர்வு பற்றிய விவாதம்) நிகழ்ச்சியின் 7-வது பதிப்பு டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில், 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்கலாம்.

இதில் பங்கேற்கும் ஆன்லைன் போட்டியானது My Gov போர்ட்டலில் 2023 டிசம்பர் 11 முதல் இம்மாதம் 12-ம் தேதி வரை நேரலையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2024 ஜனவரி 12 முதல் 23-ம் தேதி வரை இளைஞர் தினத்தைக் குறிக்கும் வகையில், பள்ளி அளவில் ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்யப்படும்.

அதன்படி, நாடு முழுவதும் 500 மாவட்டங்களில் ஓவியப் போட்டி நடத்தப்படும். 2050 பங்கேற்பாளர்கள் My Gov போர்ட்டலில் தங்கள் கேள்விகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அவர்களுக்கு பிரதமர் மோடியின் கையெழுத்திடப்பட்ட இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தேர்வு வாரியர்ஸ் புத்தகம் மற்றும் சான்றிதழும் அடங்கிய சிறப்பு “பரிக்ஷா பே சர்ச்சா” கிட் வழங்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறது.

“பரிக்ஷா பே சர்ச்சா” என்பது நாடு முழுவதிலும் உள்ள மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெளிநாடுகளில் இருந்தும் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடி, தேர்வுகள் மற்றும் பள்ளிக்குப் பிறகு வாழ்க்கை தொடர்பான கவலைகளைப் பற்றி விவாதிக்கும் ஒரு திட்டமாகும்.

மேலும், “பரிக்ஷா பே சர்ச்சா” என்பது இளைஞர்களுக்கு மன அழுத்தமில்லாத சூழலை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ என்ற பெரிய இயக்கத்தின் ஒரு பகுதியாகும்.

Please follow and like us:

You May Also Like

More From Author