சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ செப்டம்பர் 6ஆம் நாள் சர்வதேச காலநிலைக் கொள்கைக்கான அமெரிக்க அரசுத் தலைவரின் உயர் நிலை ஆலோசகர் போடெஸ்டாவுடன் சந்திப்பு நடத்தினார்.
வாங் யீ கூறுகையில், கார்பன் குறைந்த பசுமையான தொடரவல்ல வளர்ச்சியில் சீனா ஊன்றி நின்று, காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான சர்வதேச ஒத்துழைப்பில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுத்து வருகிறது என்று தெரிவித்தார். காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான ஒத்துழைப்பு, சீன-அமெரிக்க உறவில் உள்ள ஒரு பகுதியாகவும், சான் ஃபிரான்சிஸ்கோவில் இரு நாட்டு அரசுத் தலைவர்கள் எட்டிய ஒத்த கருத்தைச் செயல்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாகவும் இருக்கிறது என்றும், அமெரிக்கா சீனாவுடன் இணைந்து முயற்சி மேற்கொண்டு, உலகளாவிய அறைகூவல்களைக் கூட்டாக சமாளிக்க வேண்டும் என சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவும் சீனாவும் கையோடு கைகோர்த்து ஒத்துழைப்பது, இரு நாட்டு மக்களுக்கு நன்மை பயப்பது மட்டுமல்ல, உலகிற்கு மேலதிக நன்மைகளைக் கொண்டு வரும் என்றும், சீனாவுடன் இணைந்து தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, பயனுள்ள ஒத்துழைப்பு மேற்கொள்ள அமெரிக்கா விரும்புவதாகவும் போடெஸ்டா தெரிவித்தார்.