சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மார்ச் 25ஆம் நாள் பிற்பகல் மக்கள் மா மண்டபத்தில் சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள நவ்ரு அரசுத் தலைவர் டேவிட் அடியாங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், அனைவரையும் சமமாக நடத்துவது, சீனத் தூதாண்மையின் தெளிவான பண்பாகும். நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களைப் பேணிகாப்பதில் நவ்ருவைச் சீனா உறுதியாக ஆதரிக்கின்றது.
நவ்ருடன் இணைந்து பல்வேறு நிலை மற்றும் துறைகளில் பரிமாற்றத்தையும் பேச்சுவார்த்தையும் வலுப்படுத்தி, ஒன்றுக்கு ஒன்று புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் இடைவிடாமல் அதிகரித்து, இரு நாட்டு உறவின் அரசியல் அடிப்படையை வலுப்படுத்த சீனா விரும்புகின்றது என்றார்.
சீனாவில் பயணிப்பதற்கான அழைப்பை ஏற்று சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டது எனக்கு மிக்க மகிழ்ச்சி. சீனா எப்போதும் கடைப்பிடித்து வருகின்ற பெரிய மற்றும் சிறிய என அனைத்து நாடுகளின் சமத்துவத்தை நவ்ரு வெகுவாகப் பாராட்டுகின்றது.
ஒரே சீனா என்ற கோட்பாட்டைப் பின்பற்றி, சீனாவின் மீதான ஒத்துழைப்பை இடைவிடாமல் ஆழமாக்கி, ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டாக வெற்றி பெறும் கூட்டாளியுறவை வளர்க்க நவ்ரு விரும்புகின்றது என்று அடியாங்கு தெரிவித்தார்.
சீன மற்றும் நவ்ரு குடியரசின் கூட்டு அறிக்கையை இரு நாடுகள் வெளியிடவுள்ளன.