30 நிமிடத்தில் டெல்லி டூ அமெரிக்கா செல்லலாம்.! எலான் மஸ்க் பலே திட்டம்.! 

Estimated read time 1 min read

சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம் உலகின் நீண்ட தூர பயணங்களை ஒரு மணிநேரத்திற்குள்ளாக மேற்கொள்ள முடியும் என கூறியுள்ளார். இதன் மூலம் டெல்லியில் இருந்து சான் பிராசிஸ்க்கோ செல்லும் தூரம் வெறும் 30 நிமிடங்களாக குறையும் என கூறப்படுகிறது.

எக்ஸ் சமூக வளைத்ததில் ஒருவர், எலான் மஸ்கிடம், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆட்சியின் கீழ், ஸ்டார்ஷிப் மூலம் உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் ஒரு இடத்திற்கு ஒரு மணிநேரத்திற்குள்ளாக பயணம் மேற்கொள்ள முடியுமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மஸ்க், ‘இது சாத்தியம் தான்’ என பதிலளித்துள்ளார்.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், தனது ஸ்டார்ஷிப் மூலம் விண்கலத்தில் ஒரே நேரத்தில் 1000 பயணிகளை ஏற்றிக்கொண்டு, விண்ணில் பாய்ந்து, எங்கு செல்ல வேண்டுமோ அங்கு புவி வட்ட பாதையில் பயணித்து ஒரு மணிநேரத்திற்க்குள்ளாக குறிப்பிட்ட இடத்திற்கு செல்லும் திட்டத்தை முயற்சித்து வருகிறது.

இதுகுறித்து, டெய்லி மெயில் தனது அறிக்கையில் கூறுகையில், ” லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் டொராண்டோ இடையே 24 நிமிடங்களில் பயணிக்கலாம் என்றும், லண்டன் முதல் நியூயார்க் இடையேயான தூரத்தை 29 நிமிடங்களில் கடக்கலாம் என்றும், டெல்லி முதல் சான் பிரான்சிஸ்கோ இடையே நீண்ட பயணத்தை 30 நிமிடங்களில் கடக்கலாம் என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன. துருப்பிடிக்காத எஃகால் செய்யப்பட்ட 395 அடி விண்கலமான ஸ்டார்ஷிப் மூலம் 1,000 பயணிகள் பயணிக்கலாம் என்றும், ஏறக்குறைய 10 வருடங்களுக்கு முன்பிருந்து ஸ்பேஸ்X இதனை தெரிவித்து வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author