ஷிச்சின்பிங்கை மையமாக கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியின் உளமார்ந்த கவனிப்பையும் சீன மக்களின் ஆழ்ந்த அன்பையும் வெளிப்படுத்தும் வகையில், ஷி ட்சாங் தன்னாட்சி பிரதேசம் நிறுவப்பட்டதன் 60ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட மத்திய பிரதிநிதிக்குழு ஷி ட்சாங்கிற்கு நினைவுப் பொருட்களை அன்பளிப்பாக வழங்கியது.
இந்த நினைவுப் பொருட்களில், வாழ்த்து பலகை, வாழ்த்து பட்டுத் துணி, தலைவரின் ஓவியம், தானியங்கி நெய் தேநீர் கெண்டி, கைவினை பொருள், திரைப்படம் காட்டும் கருவி, புத்தகம் ஆகிய ஏழு வகை பொருட்கள் இடம்பெறுகின்றன.
ஷி ட்சாங் தன்னாட்சி பிரதேசத்தின் பல்வேறு நிலை கட்சி மற்றும் அரசு வாரியங்கள், ஷி ட்சாங்கில் உள்ள படை, தொழில் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள், கிராமங்கள், துறவியர் மடங்கள், பள்ளிகள், சுகாதார மையங்கள், முதியோர் பராமரிப்பு இடங்கள் மற்றும் நலவாழ்விடங்கள் ஆகியவற்றுக்கும் விவசாயிகள், ஆயர்கள், நகர மக்கள் முதலியோருக்கும் இந்நினைவுப் பொருட்கள் முக்கியமாக வழங்கப்படுகின்றன.