ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காணப்படுவதால் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரி உறைந்து காணப்படுகிறது.
டெல்லி, பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடும் பனிப்பொழிவு காணப்படுவதால் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியின் மேற்பரப்பு உறைந்து காணப்படுகிறது.
காஷ்மீரில் மைனஸ் 7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுவதால் பொதுமக்கள் நெருப்பை மூட்டி குளிரை போக்கி வருகின்றனர். மேலும், ஸ்ரீநகரில் உள்ள சாலைகளிலும் பனிபடர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.