சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, 10ஆம் நாள் மாலதீவு அரசுத் தலைவர் முயிஸுடன் சந்திப்பு நடத்தினார்.
வாங் யீ கூறுகையில்,
கடந்த ஆண்டில், நீங்கள் சீனாவில் அரசு முறை பயணம் வெற்றிகரமாக மேற்கொண்டீர்கள். சீன-மாலதீவு உறவை, பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவாக உயர்த்த இருத்தரப்பினரும் ஒருமனதாக ஒப்புக்கொண்டனர்.
சீன-மாலதீவு பொது எதிர்கால சமூகத்தைக் கட்டியமைக்க இரு நாடுகளும் கூட்டாக பாடுபடுகின்றன. கடந்த ஆண்டில், இரு நாட்டுத் தலைவர்களின் ஒத்த கருத்துகளை இரு நாடுகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன.
ஒன்றுக்கு ஒன்று அரசியல் நம்பிக்கை தொடர்ந்து மேம்பட்டு, பயனுள்ள ஒத்துழைப்புகள் ஆழமாகி, பாரம்பரிய நட்புறவு வலுப்படுத்தப்பட்டது. நாட்டு இறையாண்மையையும் சுதந்திரத்தையும் பேணிக்காக்கும் மாலதீவுக்கு சீனா முன்பு போலவே ஆதரவு அளித்து வருகின்றது என்றார்.