சீனப் பண்பாடு மற்றும் சுற்றுலா துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியின்படி, 14ஆவது ஐந்தாண்டு திட்ட காலத்தில், சீனாவின் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்புப் பணி சீராக முன்னேறி, அதிகமான சாதனைகளைப் பெற்றுள்ளது. பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்கள், மக்களின் நவீன வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து புதிய உயிர்ப்புடன் ஒளிர்கின்றன.
இக்காலக்கட்டத்தில், சீனா வெளியிட்ட தேசிய நிலை பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வத் திட்டப்பணிகளின் எண்ணிக்கை 325 ஆகும். 6ஆவது தொகுதி தேசிய நிலை பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களின் வாரிசுகளின் எண்ணிக்கை 942 ஆகும். 14 தேசிய நிலை பண்பாடு மற்றும் உயிரின பாதுகாப்பு மண்டலங்கள் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன.
தேசிய மற்றும் மாநில நிலை பண்பாடு மற்றும் உயிரின பாதுகாப்பு மண்டலங்களின் எண்ணிக்கை 276 ஆகும். சீன பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பு அரங்கும், ட்சேஜியாங், குவாங்தொங், சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம் ஆகியவற்றிலுள்ள பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பு அரங்குகளும் பொது மக்களுக்குத் திறக்கப்பட்டன.
தேசிய நிலை ரீதியில் மொத்தமாக 2290 பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களின் வாரிசுகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
