அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை பங்களாதேஷின் அரசியல் நெருக்கடியில் அமெரிக்காவின் டீப் ஸ்டேட் தலையீட்டிற்கு வேலையில்லை என்று தெரிவித்தார்.
மேலும், அங்குள்ள நிலைமையை இந்தியாவின் தலைமை கையாளும் என்று வலியுறுத்தினார்.
பங்களாதேஷில் சிறுபான்மை இந்துக்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து கவலை தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடிய பின்னர் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.
செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “எங்கள் (அமெரிக்கா) டீப் ஸ்டேட்டிற்கு எந்தப் பங்கும் இல்லை. இதில் பிரதமர் மோடி நீண்ட காலமாக உழைத்து வருகிறார்.” என்று கூறினார்.
மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களுக்கு மத்தியில் ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து பங்களாதேஷின் வளர்ந்து வரும் அரசியல் நிலப்பரப்பில் அமெரிக்கா தலையிடாது என்று அவரது அறிக்கை தெரிவிக்கிறது.
பங்களாதேஷை பிரதமர் மோடி பார்த்துக் கொள்வார்; டொனால்ட் டிரம்ப் பதில்
