சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிப்ரவரி 17ஆம் நாள் அரசு சாரா தொழில் நிறுவனங்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் முக்கிய உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில், அரசு சாரா தொழில் நிறுவனங்களுக்குப் பெரிய அளவில் ஆதரவளித்து, அரசு சாரா பொருளாதாரத்தின் சீரான மற்றும் உயர் தர வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் செயல்பட வேண்டிய திசையைச் சட்டிக்காட்டினார்.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக, சீனப் பொருளாதாரத்தின் பங்கு விகிதம், உலகப் பொருளாதாரத்தில் பல ஆண்டுகளாக சுமார் 30 விழுக்காடாக உள்ளது. அவற்றில் அரசு சாரா பொருளாதாரம் முக்கிய பங்காற்றியுள்ளது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள பல அரசு சாரா தொழில் நிறுவனங்களின் புத்தாக்க ஆற்றல் உலகில் முன்னணியில் இருக்கின்றது. அண்மையில், சீன அறிவியல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி எதிர்காலம் மற்றும் சீன சந்தையின் செயல்திறன் குறித்து கோல்ட்மேன் சாக்ஸ், ஜெர்மன் வங்கி, எச்எஸ்பிசி, அமெரிக்க வங்கி முதலியவை நம்பிக்கையை வெளிபடுத்தியுள்ளன.
அதே வேளையில், 2024ஆம் ஆண்டில் அரசு சாரா தொழில் நிறுவனங்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை, சீனாவின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகையில், 2019ஆம் ஆண்டில் 43.3 விழுக்காட்டிலிருந்து 55.5 விழுக்காடாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 6 ஆண்டுகளில் சீனாவின் மிக பெரிய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தின் முக்கிய தகுநிலையை இத்தொழில் நிறுவனங்கள் நிலைநிறுத்தி வருகின்றன. அரசு சாரா தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி உலகளாவிய விநியோகச் சங்கிலியின் நிதானத்துக்கு மேலும் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு சாரா தொழில் நிறுவனங்களுக்கு நல்ல சூழலைச் சீனா உருவாக்கி வருகிறது. 2024ஆம் ஆண்டின் இறுதியில், அரசு சாரா பொருளாதார வளர்ச்சி பற்றிய சீனாவின் முதலாவது அடிப்படை சட்டமாக, அரசு சாரா பொருளாதாரத்தை மேம்படுத்தும் சட்ட வரைவு, சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டி கூட்டத்தில் பரிசீலனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.