மார்ச் 17ஆம் நாள் பிற்பகல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் குய் சோ மாநிலத்தில் உள்ள மியாவ் மற்றும் துங் இனத் தன்னாட்சி மாவட்டத்திலுள்ள லிப்பிங் மாவட்டத்தின் ஜாவோ சிங் லாங் கிராமத்தில் ஆய்வு ப் பயணம் மேற்கொண்டார்.
அடிமட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு கட்டுமானம் மற்றும் சமூக நிர்வாகத்தை வலுப்படுத்துவது, தேசிய பாரம்பரிய பண்பாட்டைப் பாதுகாத்து பரவல் செய்வது, கிராமப்புறங்களின் பன்முக புத்துயிர் பெறுவதை முன்னேற்றுவது ஆகிய பணிகள் பற்றி அவர் ஆய்வு செய்தார்.