குய்சோ பயணத்தை முடித்து கொண்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மார்ச் 19ஆம் நாள் யுன்னான் மாகாணத்தின் லீஜியாங் நகரத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். அப்போது, இந்நகரத்திலுள்ள நவீன மலர் வளர்ப்பு தொழில் பூங்கா மற்றும் லீஜியாங் பழைய நகர் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்ற ஷிச்சின்பிங், உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்றப்படி தனித்துவம் வாய்ந்த வேளாண் துறையை வளர்ப்பது, வரலாற்று மற்றும் கலாசாரப் பாரம்பரியங்களின் பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டை வலுப்படுத்து உள்ளிட்ட பணிகளைக் குறித்து ஆய்வு செய்தார்.