சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஏப்ரல் 11ஆம் நாள் காலை பெய்ஜிங்கில் சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள ஸ்பெயின் தலைமையமைச்சர் சான்செஸைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், இவ்வாண்டு, சீனாவும் ஸ்பெயினும் பன்முக நெடுநோக்குக் கூட்டாளி உறவைக் கட்டியமைத்த 20 ஆம் ஆண்டு நிறைவாகும்.
ஸ்பெயினுடன் இணைந்து நெடுநோக்கு மற்றும் உயிராற்றல் வாய்ந்த பன்முக நெடுநோக்குக் கூட்டாளி உறவை உருவாக்கி, உலகின் அமைதி, நிதானம், வளர்ச்சி ஆகியவற்றத்தை மேம்படுத்தும் வகையில், பெரும் பங்காற்ற சீனா விரும்புகின்றது என்றார்.
மேலும், சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் பொருளாதார உலகமயமாக்கம் மற்றும் சர்வதேச வர்த்தகச் சூழலைக் கூட்டாகப் பாதுகாத்து, ஒருசார்பு மேலாதிக்கவாதத்தைக் கூட்டாக எதிர்க்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
அதனையடுத்து பேசிய சான்செஸ், ஐரோப்பிய ஒன்றியம் திறபபுடன் கூடிய சுதந்திர வர்த்தகத்தைப் பின்பற்றுவதாகவும், பலதரப்புவாதத்தைப் பாதுகாக்கப் பாடுபட்டு, ஒரு சார்பாக சுங்கவரியை அதிகரிப்பதை எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.