சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங், ஜூலை 10ஆம் நாள், உலக நாகரிக உரையாடலுக்கான அமைச்சர் நிலை கூட்டத்துக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், தற்போதைய சிக்கலான சர்வதேச சூழ்நிலையில், நாகரிகப் பாரிமாற்றைத்தின் மூலம் நாகரிகத் தடையைத் தீர்க்கவும், ஒன்றுக்கொன்று நாகரிகப் பகிர்வின் மூலம் நாகரிக மோதலைத் தவிர்க்கவும் வேண்டும் என்றார்.
மேலும், சீனா, பல்வேறு நாடுகளுடன் இணைந்து, சமத்துவம், பரஸ்பர பகிர்வு, உரையாடல், அனைவரையும் உள்ளடக்கும் தன்மை ஆகியவற்றைக் கொண்ட நாகரிக கருத்தைப் பின்பற்றி, உலக நாகரிக முன்மொழிவைச் செயல்படுத்தி, உலக நாகரிக உரையாடலுக்கான ஒத்துழைப்பு இணையத்தை உருவாக்க விரும்புவதாகவும், மனித குல நாகரிகத்தின் முன்னேற்றத்துக்கும், உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கு புதிய இயக்காற்றலை ஊட்ட விரும்புவதாகவும் தெரிவித்தார். பல்வேறு பிரதிநிதிகள் ஆழமாக கருத்துக்களைப் பரிமாற்றி, ஒத்தக் கருத்துக்களை எட்டி, பல்வகை நாகரிகங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் கூட்டு வளர்ச்சிக்குப் பங்காற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
உலக நாகரிக உரையாடலுக்கான அமைச்சர் நிலை கூட்டம் ஜூலை 10ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. இதில் இதில் 140 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 600க்கும் மேலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள் பங்கேற்றனர். “மனித குல நாகரிகத்தின் பல்வகைமையைப் பேணிக்காத்து, உலக அமைதி மற்றும் வளர்ச்சியைக் கூட்டாக முன்னேற்றுதல்”என்ற கருப்பொருள் குறித்து, அவர்கள் ஆழமாக கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு, நாகரிகப் பரிமாற்றம் மற்றும் பரஸ்பரப் பகிர்வை அதிகரித்து, வளர்ச்சி மற்றும் செழுமையை முன்னேற்றினர்.