சனிக்கிழமை (ஜூன் 7) பொகோட்டாவில் நடந்த பிரச்சார பேரணியின் போது கொலம்பிய ஜனாதிபதி வேட்பாளர் மிகுவல் யூரிப் டர்பே துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது நாடு முழுவதும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நகரின் ஃபோன்டிபான் மாவட்டத்தின் மொடெலியா பகுதியில் உள்ள எல் கோல்ஃபிட்டோ பூங்காவில் நடந்தது, அங்கு உரிப் ஆதரவாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
வலதுசாரி ஜனநாயக மையக் கட்சியின் முக்கிய உறுப்பினரும் 2026 ஜனாதிபதித் தேர்தலுக்கான முக்கிய போட்டியாளருமான 39 வயதான உரிப், அடையாளம் தெரியாத ஒரு ஆசாமியால் பின்னால் இருந்து சுடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கொலம்பிய ஜனாதிபதி வேட்பாளர் மிகுவல் யூரிப் டர்பே மீது துப்பாக்கிச் சூடு
