கூட்டு நுழைவுத் தேர்வின்(JEE) அட்வான்ஸ்டு 2024 தேர்வு முடிவுகளை ஐஐடி மெட்ராஸ், இன்று அறிவித்துள்ளது.
JEE அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகளை இப்போது அந்த தேர்வின் இணையதளமான jeeadv.ac.in இல் விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த தேர்வில், ஐஐடி டெல்லி மண்டலத்தைச் சேர்ந்த வேத் லஹோட்டி 360க்கு 355 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
ஐஐடி பாம்பே மண்டலத்தைச் சேர்ந்த த்விஜா தர்மேஷ்குமார் படேல் பெண் தேர்வர்களுள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார்.
ஐஐடி JEE அட்வான்ஸ்டு முடிவுடன், பிரிவு வாரியான கட்-ஆஃப் மதிப்பெண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஐஐடி மெட்ராஸ் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் JEE அட்வான்ஸ்டு இறுதி விடை தாள்களையும் வெளியிட்டுள்ளது.
வெளியானது JEE அட்வான்ஸ்டு 2024 தேர்வு முடிவுகள்: வேத் லஹோட்டி என்பவர் 355 மதிப்பெண்களுடன் முதலிடம்
