விழி இழந்தும்

Estimated read time 0 min read

Web team

IMG_20240202_145305.jpg

விழி இழந்தும் அறிவுப் பார்வை உண்டு எங்களுக்கு ! கவிஞர் இரா .இரவி !

எங்கள் வாழ்வில் இரவும் பகலும்
இரண்டும் ஒன்று !

விளக்கு அணைந்த வினாடிகளில்
நீங்கள் அடையும் தவிப்பு !

வாழ்நாள் முழுவதும் வாடிக்கையானது !
விழிகளில் பார்வை இழந்த எங்களுக்கு !

கண்ணாமூச்சு விளையாடி
கால் தவறி விழுவீர்கள் !

காலமெல்லாம் எங்களுக்குக்
கண்ணாமூச்சு விளையாட்டானது !

கண்ணில் தூசி விழுந்தால்
கணப் பொழுதில் துடிப்பீர்கள் !

கண்களே தூசியானதால்
தூசி விழுந்து துடிப்பதில்லை !

பின்புறமாய வந்து விழிகளை மூடி
யார் என்று வினவுவர் !

பதில் கூற இயலாது
பறி தவிப்பீர் கண்ணுடையோர் !

காதுகளே எங்களுக்குக் கண்களானதால்
குரலை வைத்தே கூறிடுவோம் !

எங்களின் விரல்களே விழிகள் !
விரல்களால் தானே வாசிக்கின்றோம் !

விழியிருந்தும் அறிவுப் பார்வையற்றோர் உண்டு
விழி இழந்தும் அறிவுப் பார்வை உண்டு எங்களுக்கு !

Please follow and like us:

You May Also Like

More From Author