மாபெரும் அங்கீகாரம்..! செஞ்சி கோட்டையை உலக புராதன சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ…!!!

Estimated read time 1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி புராதன கோட்டை முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றாக திகழ்கிறது.

சோழர் காலத்தில் சிங்கப்புரி என்று செஞ்சி அழைக்கப்பட்ட நிலையில் சோழர்கள் ஆட்சி பலவீனமடைந்த பிறகு குறுநில மன்னர் கோனார் வம்ச ஆட்சியை செஞ்சியில் 13-ஆம் நூற்றாண்டில் நிறுவினார்.

அதே நூற்றாண்டில் கோன் சமூக ராஜ வம்சத்தால் இந்த கோட்டை கட்டப்பட்டது. ஆனந்த கோன் எனும் அரசால் கட்டப்பட்டு பின்னர் கிருஷ்ண கோன் என்ற அரசால் விரிவு படுத்தப்பட்டது.

இந்த கோட்டை மூன்று மலைகளை அரணாகக் கொண்டு 13 மீட்டர் சுற்றளவோடு மிகப்பெரிய அரணாக விளங்கியது. செஞ்சிக்கோட்டை மட்டுமே சுமார் 11 கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள நிலையில் சத்ரபதி சிவாஜியால் இந்தியாவின் தலைசிறந்த உட்புக முடியாத கோட்டை என்று புகழாரம் சூட்டப்பட்டது.

இந்த கோட்டையை கிழக்கின் டிராய் என ஆங்கிலேயர்கள் அழைத்தனர். கடந்த 1921 ஆம் ஆண்டு முக்கியமான தேசிய சின்னமாக இந்த கோட்டை அழைக்கப்பட்ட நிலையில் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

இந்நிலையில் யுனெஸ்கோ தற்போது உலக புராதான சின்னங்களில் ஒன்றாக செஞ்சிக்கோட்டையை அறிவித்துள்ளது.

மேலும் இதன் காரணமாக தற்போது உலகபுராதான சின்னங்களில் ஒன்றாக செஞ்சிக்கோட்டையும் அமைந்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author