20வது மேற்கு சீனச் சர்வதேச பொருட்காட்சி 25ஆம் நாள் சிச்சுவான் மாகாணத்தின் செங்டு நகரில் தொடங்கியது. ‘சீர்திருத்தத்தை ஆழப்படுத்தி திறப்பை விரிவுபடுத்துதல்’ என்ற கருப்பொருள் கொண்ட இந்தப் பொருட்காட்சியில், 62 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த பல நிறுவனங்கள் பங்கேற்றன.
சர்வதேச ஒத்துழைப்பு அரங்கில் இடம்பெறும் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த ஒரே நகரமாக, மெய்ஷான் நகரம் தனது பொருட்காட்சிப் பகுதியில் டோங்போ அரிசி, டோங்போ ஊறுகாய், மெய்ஷான் வசந்த ஆரஞ்சு, டோங்போ பன்றி இறைச்சி உள்ளிட்ட உள்ளூர் சிறப்புப் பொருட்களின் மூலம், வேளாண்மை நவீனமயமாக்கலின் வளர்ச்சியின் சாதனைகளைக் காட்சிப்படுத்தியது.
