மக்களவைத் தேர்தலில் பாஜக 370 இடங்களிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி சுமார் 400 இடங்களிலும் வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமையும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
ஜெயந்த் சவுத்ரி தலைமையிலான ராஷ்டிரிய லோக் தளம் (ஆர்எல்டி), சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) மற்றும் சில பிராந்திய கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) இணையும் சாத்தியம் குறித்த கேள்விக்கு, மேலும் பல கட்சிகள் ஆளும் கூட்டணியில் சேரலாம் என தெரிவித்தார்.
2024 நாடாளுமன்ற தேர்தல் என்.டி.ஏ மற்றும் இந்திய எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான தேர்தலாக இருக்காது, மாறாக வளர்ச்சி மற்றும் வெறும் கோஷங்களை கொடுப்பவர்களுக்கு இடையிலான தேர்தலாக இருக்கும் என அவர் கூறினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை குறித்த கேள்விக்கு, 1947-ல் நாட்டைப் பிரித்ததற்கு அவரது கட்சி காரணமாக இருந்ததால், நேரு-காந்தி வாரிசுகளுக்கு இதுபோன்ற அணிவகுப்பை நடத்த உரிமை இல்லை என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் அரசாங்கம் தாக்கல் செய்த வெள்ளை அறிக்கை குறித்து, திரு ஷா, 2014 இல் ஆட்சியை இழந்தபோது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) என்ன குழப்பத்தை ஏற்படுத்தியது என்பதை அறிய நாட்டிற்கு முழு உரிமை உள்ளது.
அப்போது (2014) பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தது, எல்லா இடங்களிலும் மோசடிகள் நடந்தன, அன்னிய முதலீடு வரவில்லை, அந்த நேரத்தில் நாம் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருந்தால், அது உலகிற்கு தவறான செய்தியை கொடுத்திருக்கும்.
ஆனால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு, நமது அரசு பொருளாதாரத்தை மீட்டெடுத்து, அன்னிய முதலீட்டைக் கொண்டு வந்துள்ளது, ஊழல் எதுவும் இல்லை. எனவே வெள்ளை அறிக்கை வெளியிட இதுவே சரியான தருணம் என்றார்.
அயோத்தியில் ராமர் கோவிலில், ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்டப்பட வேண்டும் என 500-550 ஆண்டுகளாக நாட்டு மக்கள் நம்பி வருவதாக உள்துறை அமைச்சர் கூறினார். ஆனால், சமாதான அரசியலாலும், சட்டம்-ஒழுங்கைக் காரணம் காட்டி ராமர் கோவில் கட்ட அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
குடியுரிமை (திருத்தம்) சட்டம் (சிஏஏ) குறித்து, திரு ஷா, 2019 இல் இயற்றப்பட்ட சட்டம், இது தொடர்பான விதிகளை வெளியிட்ட பிறகு, மக்களவைத் தேர்தலுக்கு முன் செயல்படுத்தப்படும் என்றார்.எங்கள் முஸ்லிம் சகோதரர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் மற்றும் தூண்டப்படுகிறார்கள் (சிஏஏவிற்கு எதிராக). பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இந்தியாவிற்கு வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக மட்டுமே சிஏஏ உள்ளது. இது யாருடைய இந்திய குடியுரிமையையும் பறிப்பதற்காக அல்ல,” என்று அவர் கூறினார்.