“இந்தியாவில் இங்குதான் புத்திசாலிகள் அதிகமா இருக்காங்க”…

Estimated read time 1 min read

இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாகும். 140 கோடிக்கும் மேற்பட்ட மக்களை கொண்டுள்ள இந்த நாடு, பல்வேறு மொழி, மதம், கலாச்சாரம் கொண்டவர்களால் அமைந்த பன்முகத்தன்மையுள்ள ஒரு குடியரசு. இதுபோன்ற நாட்டில், எந்த மாநிலங்களில் அதிக புத்திசாலிகள் இருக்கின்றனர் என்பதைக் கண்டறியும் வகையில் வெளியான IQ அடிப்படையிலான பட்டியல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இந்த பட்டியலானது, மாநிலங்களைச் சேர்ந்த மக்களின் சராசரி IQ மதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. இதில் கேரளா முதலிடத்தையும், தமிழ்நாடு மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.

1. கேரளா – கல்வியில் முதலிடம் வகிக்கும் இந்த மாநிலத்தில் மக்களின் IQ 110-112 ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது.

2. டெல்லி – தலைநகரான டெல்லியில் கல்வி மற்றும் பயிற்சி மையங்கள் அதிகம் இருப்பதால் IQ 106-109 வரை உள்ளது.

3. தமிழ்நாடு – கணிதம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்கும் மாணவர்களால் IQ 103-106 வரை உள்ளது.

மற்ற மாநிலங்களின் நிலை

4. மகாராஷ்டிரா – IQ 102-104

5. கர்நாடகா – IQ 102-103

6. உத்தரப்பிரதேசம் – IQ 99

7. பஞ்சாப் – IQ 99

8. பீகார் – IQ 98

9. சண்டிகர் – IQ 99

10. குஜராத் – IQ 97

இந்த பட்டியல் அறிவாற்றலின் அடிப்படையில் மாநிலங்களை ஒப்பிடும் விதத்தில் வெளியானதாகும். கல்வியில் முன்னேற்றம் மற்றும் அறிவுசார் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் மாநிலங்கள், பொதுவாக உயர்ந்த IQ மதிப்பைப் பெற்றுள்ளன. இதில், தமிழ்நாட்டின் இடம் பெருமையைத் தருகிறது. இதற்கான காரணங்களில் ஒன்றாக, அதிகமான பயிற்சி மையங்கள், பாடசாலைகள், மற்றும் உயர்கல்வி வாய்ப்புகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author