ஜுலை 7ஆம் நாள், பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் 17ஆவது உச்சி மாநாடு பிரேசிலில் நிறைவடைந்தது. செயற்கை நுண்ணறிவு, கால நிலை மாற்றம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய ரியோ டி ஜெனிரோ அறிக்கை இதில் வெளியிடப்பட்டது. உலக நிர்வாகம் பற்றிய சீர்திருத்தத்தை முன்னேற்றுவது குறித்தும், உலக அமைதியைப் பேணிக்காப்பது, பொருளாதார வளர்ச்சி ஆற்றலை வலுப்படுத்துவது, நாகரிக பரிமாற்றத்தை முன்னேற்றுவது ஆகிய 3 முன்மொழிவுகளை சீனா முன்மொழிந்தது. பிரிக்ஸ் ஒத்துழைப்பு மற்றும் தெற்குலக வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கும் நடவடிக்கைகளை சீனா அறிவித்தது.
இவ்வுலகிற்கு, சூரிய ஒளி மற்றும் காற்றைப் போன்று அமைதியும் தேவை. கடந்த சில ஆண்டுகளில், சீனா, இதர பிரிக்ஸ் நாடுகளுடன் இணைந்து அமைதியைப் பேணிக்காப்பதற்கு பங்காற்றி வருகின்றது. பிரிக்ஸ் நாடுகள் நீதியின் பக்கத்தில் ஊன்றி நின்று, அமைதி வழிமுறையின் மூலம் சர்ச்சைகளைத் தீர்க்க வேண்டும் என்று இவ்வுச்சி மாநாட்டில் சீனா வலியுறுத்தியது.
பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில், புதிய வளர்ச்சி ஆற்றலை உலகம் கண்டு பிடிக்க வேண்டும். எண்ணியல், தூய்மை ஆகிய துறைகளின் ஒத்துழைப்புகளை விரிவாக்க வேண்டும் என்று சீனா முன்மொழிந்தது. பெரும் பிரிக்ஸ் ஒத்துழைப்புக்கு உந்து சக்தியை அளிப்பதோடு, தெற்குலக நாடுகளின் எண்ணியல் தொழில் நுட்ப திறனை அதிகரிப்பதற்கும் புதிய வளர்ச்சி வாய்ப்பைப் பிடிப்பதற்கும் இது துணை புரியும்.
உலகின் மிக முக்கிய புதிய வளர்ச்சி நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் ஒன்றிணைப்பான ஒத்துழைப்பான மேடையாக, தெற்குலக ஒன்றிணைப்பையும் ஒத்துழைப்பையும் முன்னேற்றும் முக்கிய வழிமுறையாகவும், உலக நிர்வாக சீர்திருத்தத்தை வலுப்படுத்தும் முன்னோடியாகவும் பிரிக்ஸ் ஒத்துழைப்பு அமைப்பு திகழ்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.